உடன் பதவி துறப்பேன்! சீமான் சூளுரை


 எமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்கினால் அடுத்தநாளே இராஜினாமா செய்வேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்றுமுன்தினம் சென்னையில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றும் போதே சீமான் இவ்வாறு சூளுரைத்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியல் என்பது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் உலக பொதுவிற்கான அரசியலை முன்னெடுக்கிறோம்.

இதுவரை இந்த நிலத்தில் இருந்த அரசியலிலிருந்து நேர் எதிர் திசையில் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது.

கடந்த தேர்தல்களில் பணமழை பொழிந்து, கூட்டணி இணைந்தது. எனினும் 17 லட்சம் பேர் எமக்கு வாக்களித்தனர்.

நாம் கருத்தியல் போரை தொடங்கி உள்ளோம் - அதைக் கூறி வாக்கைப் பெறுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.