வடக்கு மக்களுக்கு விசேட அறிவிப்பு!

 


தீவிரமடைந்து வரும் கொவிட் - 19 பரம்பல் இடர்நிலையில் வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் கொவிட் - 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றது.

அதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானமாகவும் சமூக பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபைகள், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் - என்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.