ஞானசார தேரர் எடுத்துள்ள திடீர் தீர்மானம்!


 ஞானசாரர் தலைமையிலான குழு இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக அண்மையில் மஹாநாயக்க தேரர்களை சந்தித்து ஞானசார தேரர் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.