இராணுவத்தினரிடம் காலில் விழுந்து கும்பிட்ட கன்னியாஸ்திரி!!

 மியான்மரில் ஜனநாயக அரசைக் கலைத்து ராணுவ ஆட்சி தங்கல் கட்டுப்பாட்டிற்கும் நாட்டைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூகி தற்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொண்டதில் 100 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் மியான்மர் நாட்டிலுள்ள ஒரு குடிசைப்பகுதியில் போலிஸார் தாக்குதல் நடத்த வந்தனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பல சிறுவர்களும் கலந்துகொண்டிருந்தhர்கள். அப்போது அங்கு வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என இராணுவத்தினரின் காலில் விழுந்தார். இதனை எதிர்பார்க்காத போலீஸார் பதிலுக்கு அவரது காலில் விழுந்தனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.