முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் சம்பளம் குறைவுதான்!

 நடிகர் – நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா,  “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் 3 கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான்.

அந்த நடிகை வாங்கும் சம்பளம் முதல் 20 நடிகர்கள் பட்டியலில் கூட இல்லாத கதாநாயகர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.

நடிகைகள் தங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டால் பிரச்சினையாக்குகின்றனர். ஆனால் நடிகர் சம்பளம் அதிகம் கேட்டால் உடன்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.