படுகொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்!

 மீரியகொட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாகவே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரும்புக் கம்பி ஒன்றினால் தாக்கியதிலேயே 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.