தலீபான் பயங்கரவாதிகள் 30 பேர் உயிரிழப்பு!

 ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரின் அதிரடித் தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

தொடர்ச்சியாக நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை எட்டப்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இராணுவ வீரர்களையும் பொலிசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக இராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.