சிவராத்திரி தினம் மனித குலத்தின் அமைதியை குறிக்கின்றது!

 மனிதனும் கடவுளும் ஒரே முனையில் சந்திக்கும் வரம் கொடுக்கும் சிவராத்திரி தினமாக இன்றைய தினம் அமையட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கும் சக வாழ்வுக்கும் வழிவகுக்கும் பக்தி நாள் என வர்ணிக்கக்கூடிய சிவராத்திரி தினம் மனித குலத்தின் அமைதியை குறிக்கின்றது.

நம்பிக்கையின் ஔி, அனைத்திலும் பிரகாசிக்கட்டும் எனவும் அக மற்றும் புற இருளை விரட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நாளாக சிவராத்திரி அமையட்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சிவராத்திரி தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.