கொஹுவலையில் காரிலிருந்து வர்த்தகரின் சடலம் கண்டெடுப்பு!

 கொஹுவல – ஆசிரி மாவத்தையில் காரொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காரும் சடலமும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

களுபோவில – ஹாதிய மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.