கர்ணன் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் இன்று வெளியாகுகிறது!

 கர்ணன் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள கண்டா வரச்சொல்லுங்க பாடல் மிகப் பெரிய அளவில்  ஹிட் ஆகியுள்ளது.

இரண்டாவது பாடலாக பண்டாரத்தி புராணம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா,ரீத்தா பாடியுள்ளார்கள்.

இந்நிலையில் 3-வது பாடலான திரெளபதையின் முத்தம் இன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.