கல்வியின் மூலம் இலக்குகளை அடையலாம்!

 கல்வியின் மூலம் சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க முடியும் என்பதோடு , இதன் மூலம் உலகளாவிய இலக்குகளை இலகுவாக அடைய முடியுமென்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு, ஜனநாயக பங்கேற்பு, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக கல்வியூடாக வளர்க்க முடியுமென்பதை மனதில் கொள்ள வேண்டுமென்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இரத்மலானையிலுள்ள ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.