பா.ஜ.கவில் இணைந்துக்கொண்டார் செந்தில்!

 மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருப்பதாக  நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த இவர்,  ஜெயலலிதாவின் மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக  பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன்.

மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்”எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.