ஒஸ்ரேலியா நகரங்களில் தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் (மார்ச் 13)!!

 


ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில், தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி ஒஸ்ரேலியாவின் பெரு நகரங்களில் (சிட்னிமெல்பேர்ண்பேர்த்பிரிஸ்பேர்ன்அடிலெயிட்) எதிர்வரும் சனிக்கிழமை 13-03-2021 அன்று பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 

இந்த வகையில் மெல்பேணில் மதியம் 02 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை State Library Victoria (in front of Melb. Central @ Swanston Street) இற்கு முன்பாக தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.  அத்துடன் இந்நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் இந்த விபரங்களை உங்களிற்கு தெரிந்த சகல ஒஸ்ரேலிய தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளவும். நன்றி!!.


Other State Event Details - on March 13th

·        Parramatta Town Hall, Parramatta, Sydney,  from 11am-1pm : 0401 842 780, 0402 169 364, 0424 757 814

·        Forrest Chase, Forrest Place, Perth  3pm-6pm : 0469 823 269, 0470 169 692,  0421 514 004

·        Victoria Square (North), Adelaide 10am : 0469 059 281, 0470 334 004, 0469 067 679

·        King George Square, Brisbane 10.30am : 0415 159 283, 0410 296 811, 0420 638 750

·        State Library Victoria, Melbourne,  from 2pm – 3.30pm : 0433 002 619, 0406 429 107, 0437 332 240

------------------------------ 

Media Release - Melbourne:

அன்பான உறவுகளே,

தமிழீழ தாயக உறவுகளின் நீதிக்கான கோரிக்கைக்கு தீர்வுதேடும் பயணத்தில்ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும்தீர்மானத்தில்தமிழர் இனைழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

 

அத்தோடு தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை (IIIM) ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் சாட்சிகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு கோருவதுடன்ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் விசேட தூதுவரை நியமித்து இலங்ககத்தீவில் தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்குமாறும் தாயகமக்கள் கோரிநிற்கின்றார்கள். சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்திதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த உதவுமாறும் தாயகமக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

 

இவற்றை வலியுறுத்திஎமது மக்கள் தாயகத்தில் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகிலும் பல கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாகபிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

 

ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபானதுதமிழ் மக்களின் நீதிக்கான தீர்வுகளை தவிர்த்து மீளவும் சிறிலங்கா அரசுக்கு காலஅவகாசம் வழங்குகின்ற தீர்மானம் ஒன்றையே முன்வைக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

 

எனவேதமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களில் (சிட்னிமெல்பேர்ண்பேர்த்பிரிஸ்பேர்ன்அடிலெயிட்) எதிர்வரும் சனிக்கிழமை 13-03-2021 அன்று பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 

இந்த வகையில் மெல்பேணில் மதியம் 02 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை State Library Victoria (in front of Melb. Central @ Swanston Street) இற்கு முன்பாக தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

 

மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 OR 0406 429 107 & 0437 332 240

 

இவ்வண்ணம்,

தமிழர் நீதிக்கான போராட்ட அணி &

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோரியா

---------------------------------------------------------------

P.S NOTE (பிற்குறிப்பு):

Fasting of Tamil mother Ambihai, in UK - Moral support of Tamils is very important.

Dear Tamil Activists,

All of you know about the fast unto death by a UK Tamil mother Ambihai, calling UNHRC to put forward a strong resolution on Srilanka, recommend Srilanka to ICC etc. At the same time her request for the Tamil people to write to the country Presidents, Prime Ministers and Foreign Ministers of the 47 UNHRC member countries. This is her final call for her beloved Tamil Community. No one can guarantee her future. We doubt whether the Resolution will reflect her concerns. Whether the countries will consider  her requests. It is very worrisome to fellow Tamils.

--
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.