இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 மத்திய அரசாங்கம் கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகான வழிபாட்டுத் தலங்களில் எந்த வித மாற்றமும் கூடாது என குறிப்பிட்டு 1991ம் ஆண்டில் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வந்தது.

மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1192ம் ஆண்டில் பிருத்விராஜ் சவுகான் என்ற மன்னரை முகமது கோரி படையெடுத்து வென்ற பிறகு இந்தியாவில் பல இந்துகோவில்கள் இடிக்கப்பட்டு முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டதாக அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

மனுக்களை விசாரித்த நீதியரசர்கள், பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சுதந்திரத்தின்போது இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித மாற்றமும் ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.