அச்சுறுத்தும் கொரோனா!

 பிரேஸிலில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 84 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 13 இலட்சத்து 68 ஆயிரத்து 316ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கொரோனாவில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 10 இலட்சத்து 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 8 ஆயிரத்து 318 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் உலக அளவில் கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளின்  பட்டியலில் இந்தியாவை பின் தள்ளி பிரேஸில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் இந்தியா மற்றும் நான்காவது இடத்தில் ரஸ்யாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.