தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

 தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிடுகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட மு.க.ஸ்டாலினிடம், தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நாளை மாலைக்குள் வெளியாகும் என தெரிவித்தார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடவுள்ளார்.

குறித்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.