வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!

 மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கென இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வருகைத்தரவுள்ளார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். மாலை 6:00 மணிக்கு ராஜவீதி தேர்முட்டி அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.