மேல் மாகாண பாடசாலைகள் இன்று ஆரம்பம்!

 கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை)  மீளவும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இன்று  5 , 11 மற்றும் 13ஆம் தர வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில், ஏனைய தர வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மீளவும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.