காணி ஆவணங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் !

 யாழ்.மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தும் ( நாளை)இன்று தினமே மீண்டும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்படும். என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வாழ்வாதார குழுவின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று  இடம்பெற்றது. 

இதன் போது  யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனால்  காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு மாற்றியமை  தொடர்பான பிரச்சனை முன்வைக்கப்பட்ட போது அது தொடர்பில் உரிய அமைச்சரிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உடனடியாக கொண்டு சென்ற ஆவணங்களை மீள கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள் கொண்டு சென்ற கோப்புகள் யாழ்ப்பாணம் வருமா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்  இதன்போது பதிலளித்த அமைச்சர் நாம் சொல்வதைத் தான் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம் எனப் பதிலளித்தார்.

இந்த கூட்டதொடரில் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே, வடமாகாண ஆளுனர் பி.எம். எஸ் சாள்ர்ஸ், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான  அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான  கே.என் டக்ளஸ் தேவானந்தா, யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அமைச்சுக்களிக் செயலாளர்கள், உள்ளுாட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவத்தினர், பொலிஸார் என பலர் கலந்து கொண்டு பலதரப்பட்ட விடயங்களை ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.