09 பேருக்கு வடக்கில் கொரோனா…!

 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடதட்டில் கல்விகற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்று உறுதியான 09 பேரில் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் அடங்குவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை கோப்பாய் சுகாதார பிரிவில் வசிக்கும் காரைநகர் இ.போ.ச. சாலையில் பணியாற்றும் திருத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.