ஜனாதிபதி செயலக வளாகத்தில் நாளை ஆர்ப்பாட்டம்!

 வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதை வலியுறுத்தி நாளை (19) ஜனாதிபதி செயலக வளாகத்தில், எதிர்கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதை வலியுறுத்தி நாளை பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கொவிட் பரவலின் போது அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்ற நன்கொடை நிதியூடாகவேணும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுமுறையில் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுகின்றனர்.

அரசாங்கத்தின் சகாக்களின் ஹோட்டல் வர்த்தகத்திற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.