2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது!

 


2021-2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது.

குறித்த வரவு செலவு திட்டம் நேற்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த 127 அம்சங்களுக்கும் மக்களவை ஒப்புதல் அளித்திருந்தது.

இதனையடுத்தே மேற்படி திட்டம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வரவு செலவு திட்டம் எவ்வித பரிந்துரையோ, திருத்தமோ இன்றி மீண்டும் மக்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.