டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் : சட்டமூலம் நிறைவேற்றம்!

 


டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை வரை நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்தின்படி டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணை நிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்க வேண்டும் என்பதாகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்பு செய்தன.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய ஜனநாயகத்தின் சோகமான நாள் என விமர்சித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.