இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

 


இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 23-ம் திகதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 26-ம் திகதியும், 28-ம் திகதி 3-வது போட்டியும் நடக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் உள்ளன. வெற்றியாளரை முடிவு செய்யும் 5-வது போட்டி நாளை நடக்கிறது.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், யஜுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.