இலங்கை - மே.இ.தீவுகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் இன்று!


 சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகும்.

டெஸ்ட் உலகக் கிண்ணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கிரேக் பிராத்வைட்டும் தலைமை தாங்குகின்றனர்.

இரு அணிகளுக்கிடையிலான கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகளில் இலங்கை வென்றுள்ளது, அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளன. 

இந்த சுற்றுப்பயணத்தில் ஆறு வெள்ளை பந்து போட்டிகளில் ஒரு வெற்றியினை மாத்திரமே பதிவுசெய்துள்ள இலங்கை அணிக்கு இந்தப் போட்டியானது ஒரு சவால் மிக்கதாக அமைந்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 25 வரை நடைபெறும், இரண்டாவது டெஸ்ட் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். 

West Indies: Kraigg Brathwaite(c), John Campbell, Nkrumah Bonner, Kyle Mayers, Jermaine Blackwood, Joshua Da Silva(w), Jason Holder, Rahkeem Cornwall, Alzarri Joseph, Kemar Roach, Shannon Gabriel

Sri Lanka: Dimuth Karunaratne (c), Lahiru Thirimanne, Oshada Fernando, Dinesh Chandimal, Pathum Nissanka, Dhananjaya de Silva, Niroshan Dickwella (wk), Suranga Lakmal, Lasith Embuldeniya, Dushmantha Chameera, Vishwa Fernando

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.