இலங்கையில் சீன பிரஜைகளுக்கே முதலிடம்!

 


சீனா தயாரித்த 'சினோபாம்'; கொரோனா தடுப்பூசிகள், இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் வழங்கப்படுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் கோரிக்கைக்கமைய, சினோபாம் தடுப்பூசிகளை சீனர்களுக்கு செலுத்த தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசர பாவனைக்காக தெரிவு செய்யப்பட்ட சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய சீனாவின் தடுப்பூசி அந்நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுவதால், இலங்கையில் வசிக்கும் சீனர்களுக்கு அதனை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றார்.

இதேவேளை சினோபாம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.