திடீரென ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம்?


 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பாரபட்சமற்ற முறையில் செயற்பட வேண்டும் என கோரி, யாழ் சிவில் சமூக நிலையம் என்ற அமைப்பினால் இன்றையதினம் யாழ் நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பாரபட்சம் அற்ற வகையிலும் நியாயமான முறையிலும் மனித உரிமைகள் குறித்து உண்மையான கரிசனை கொண்டிருக்குமாயின், தமிழ் ஆயுதக் குழுக்கள் மற்றும் இந்திய அமைதிகாக்கும் படையினரால் இலங்கை மக்களுக்கு இழைத்த அநீதிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்பட்ட ஆயுதக் குழுக்களான தமிழீழ விடுதலை புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி போன்ற மிகப் பெரிய ஆயுதக் குழுக்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசினால் தூண்டப்பட்டவரான அருண் சித்தார்த் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய அமைதிக்காக்கும் படையினரும் இலங்கையின் சாதாரண பொதுமக்களுக்கு எதிராக பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.