அமைச்சர் சரத் வீரசேகரவால் நாட்டுக்கு பேராபத்து!

 


அமைச்சர் சரத் வீரசேகரவால் நாடு கடுமையான ஆபத்தில் இருப்பதாக அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தென்னிலங்கை ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பலர் அமைச்சர் வீரசேகர மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த பல நாடுகள், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில், இப்போது மாற்று கொள்கைக்கு மாறிவிட்டன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சந்திரபீமா இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அரசுக்கு தகவல் அளித்துள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர புர்கா தடை தொடர்பில் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்களால் அரசாங்கத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவிப்பதாகவும் பல அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.