உயிரிழந்தார் கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர்!


 கொங்கோ குடியரசில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலலாஸ் உயிரிழந்துள்ளார்.

கொங்கோ குடியரசில் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒருநாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியோகியுள்ளது.

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 61 வயதான கோலலாஸ் தேர்தலுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தலைநகர் பிரஸ்ஸாவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் கோலஸ் சிகிச்சை பெற்று வருவதாக சனிக்கிழமை கூறினார்.

வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வீடியோவில், கோலஸ் ஆக்ஸிஜன் முகமூடி அணிந்திருப்பதாகவும், வைத்தியசாலையின் படுக்கையில் கிடந்தபோது கையில் இரத்த அழுத்தக் கட்டை இருப்பதாகவும் காட்டியது.

அத்துடன் அந்த வீடியோவில், என் அன்பான தோழர்களே, நான் சிக்கலில் இருக்கிறேன். நான் மரணத்தை எதிர்த்துப் போராடுகிறேன், எனினும் மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று வேட்பாளர் கோலஸ் ஆக்ஸிஜன் முகமூடியை நீக்கிய பின் பலவீனமான குரலில் கூறினார்.

இந் நிலையிலேயே அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.