அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!


 அவுஸ்திரேலியாவில்  கிழக்கு கடற்கரையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் சுமார் 18,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை  பெய்து வருவதால் சிட்னி மாநில தலைநகரம் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. வாரம் முழுவதும் மழை தொடரக்கூடும் எனவும், பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

வெள்ளத்தால் வெளியேறியவர்களுக்கு  அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நிதி வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலாக சேதம் ஏற்பட்டுள்ளது.

இது அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் சனத்தொகைளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல சமூகங்கள் முன்னர் கோடையில் காட்டுத்தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாவர்

மீட்பு குழுவினரால்  சுமார் 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் கார்களில் இருந்தும், வீட்டில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த ஒரு கும்பத்தை ஹெலிகொப்டர் மூலமும் மீட்டுள்ளனர்.

சிட்னியின் மேற்கில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளத்தில் குழந்தையுடன் சிக்கித்தவித்த ஒரு குடும்பத்தையும் மீட்டுள்ளனர்.

சில பகுதிகளில் 1,000 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளதாவும், இது சமீபத்திய நாட்களில் அசாதாரணமான நிகழ்வு எனவும் அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.