சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பாரிய மாற்றம்!


 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தை தாமரை இலைகளாக மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த தாமரை இலையை மறுவடிவமைக்க சுமார் ரூ .35 மில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவ்விடத்தில் தாமரை இலை வடிவமே இருந்தது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் இதை அரலி இலை வடிவத்திற்கு மாற்றியது.

இந்த பயணிகள் முனையம் முன்னதாக தாமரை இலையின் வடிவத்தில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரலி இலையின் வடிவத்திற்கு மாற்றியதன் மூலம் அது பாழடைந்தது கலை இழந்தது என விமான நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்

எனினும் இந்த புதிய மாற்றங்கள் அரசாங்கத்திற்கு கூடுதல் செலவில் செய்யப்படாது என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.