அமெரிக்காவில் துப்பாக்கி சூடு!


 அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேக நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலராடோவின் போல்டரில் உள்ள கிங் சூப்பர்ஸ் மளிகை கடையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் காயமடைந்துள்ளதாகவும் போல்டர் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டென்வரில் உள்ள ஏ.பி.சி. செய்திச் சேவை, பல சட்ட அமலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்து பகுதி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தது.

எனினும் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டின் போது பொலிஸ் அதிகாரிகள் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. துப்பாக்கி சூட்டிற்கான சாத்தியமான நோக்கம் பற்றிய தகவல்களையும் அவர்கள் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.