ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!


 கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உப பரிசோதகர் (வயது 52) ஒருவரும் லொறியொன்றின் உதவியாளர் ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மீதும் வேகமாக பயணித்த வேன் மோதியதன் காரணத்தினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் தலவத்தகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதுபோன்ற விபத்துக்களால் தினசரி சுமார் பத்து பேர் உயிர் இழப்பதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.