நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

 


சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேலான அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை‍ வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.