இறுதி கிரியையில் ஜனாதிபதி, பிரதமர், மகாநாயக்க தேரர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலந்துகொள்ளவுள்ளார்கள்.

தேசிய, சமய மற்றும் புத்தசாசனம் மற்றும் நல்லிணக்கத்துக்கு இவர் ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு இன்றைய  தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களையும், மதுபானசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை மரமபாலாராமய விகாரையில் இருந்து புத்தசாசனத்துக்கு சேவையாற்றிய மகாநாயக்க தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 88 ஆவது வயதில்  கடந்த 22 ஆம் திகதி இயற்கை எய்தினார்.