தீவிரவாதத்தை ஊக்குவிக்க முயன்ற இருவர் கைது!


 தீவிரவாதத்தை ஊக்குவிக்க முயன்ற குற்றச்சாட்டில் மேலும் இரு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி மாத்தளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாதத்தை பரப்பியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து டிசம்பர் 5 ஆம் திகதி இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கையர்களிடமிருந்து நிதி சேகரத்ததாவும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலையமைப்புகனினூடாக தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இலங்கைக்கு நிதி அனுப்பியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை சமூக ஊடகங்களில் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டுக்காக காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் நெருங்கிய பன்பற்றுபவராக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.ஐ.டி தடுத்து வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.