எதிர்வரும் 31ம் திகதி 18 மணிநேர நீர் வெட்டு
வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீரிகொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை