யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி!


கடந்த 21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டு, நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபை தலைவர் க.தர்ஷன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் சுலக்ஸனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஸன் மற்றும் கஜன் ஆகியோரின் நினைவாக, கல்வி ஊக்குவிப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வைப்பிலிடப்பட்டு, வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.