முதலாம் நாள் ஆட்ட முடிவில் 287 ஓட்டங்களுடன் மே.இ.தீவுகள்!


 இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 287 ஓட்டங்களை குவித்துள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியானது சமனிலையில் நிறைவுபெற, இரண்டாவது போட்டி நேற்றைய தினம் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மேற்கிந்தியத்தீவுகளுக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீராகள களமிறங்கிய அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட் 99 ஓட்டங்களுடனும், 8 ஆவது விக்கெட்டுக்கா களமிறங்கிய ராகீம் கார்ன்வால் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சாமர மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.