68 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது!


மாத்தறை, தியந்தர பகுதியில் 68 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த காரொன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, கட்டான பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண்ணொருவரும்,  கண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் ஆவர்.

இந் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் தெற்கு பகுதி போதைப்பொருள் விநியோகத்திற்கான மையமாக மாறி வருவதை அவதானித்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.