கண்டி, நீர்கொழும்பில் கொரோனா மரணங்கள் பதிவு!




 இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 534ஆக அதிகரித்துள்ளது. 

இறுதியாக இரண்டு கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

கண்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

 நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஆணொருவர், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்கிழமை இரவு 9 மணி வரை 154 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 88 392 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 85 371 பேர் குணமடைந்துள்ளதோடு , 2489 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 532 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் , பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று சுகாதார தரப்புக்கள் அறிவுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.