மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது!
மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் குற்ற சட்டமூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மெட்ரோலிங்க் பாதையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து வீதியை முற்றுகையிட்டமைக்காக 18 பேர் கைது செய்யப்பட்டதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படும் வகையில் பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை விதிமுறைகளை மீறுபவருக்கும் அபராதம் விக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை