பதுளை கோர விபத்தில் 13 பேர் பலி

 


பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.