மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோரின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான பேசூஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளார். இந்நிலையில்  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன்,  இந்தியன்,  ஜீன்ஸ்,  சிவாஜி,  எந்திரன்,  ஐ,  2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.