நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கையர்கள்!

 


இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் பொலிஸாரினால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அடுத்து உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு சொந்தமான ரோந்து வானூர்தி இன்று புதன் கிழமை காலை இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போது இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய விசை படகுடன் நின்று கொண்டிருந்த இலங்கை படகை நோக்கி ஹெலிகாப்டர் தாழ்வாக சென்றதை கண்ட இந்திய படகு அங்கிருந்த தப்பி சென்றது.

ஆனால் இலங்கை படகு அங்கிருந்து தப்ப முடியாமல் இந்திய கடற்படையிடம் சிக்கியது.

நடுக்கடலில் சிக்கியவர்களை இந்திய கடற்படை வீரர்கள் படகையும் அதில் இருந்த 2 பேரையும் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு செல்லும் படி தெரிவித்தனர்.

ஆனால் படகில் இருந்தவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற போது இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகொப்டரை தாழ்வாக செலுத்தி படகையும் அதிலிருந்த மூவரையும் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு கொண்டு வந்து விட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற தமிழக கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் படகில் இருந்த இருவரிடம் விசாரனை நடத்தினர்.

மேலும் கைது செய்யப்பட்ட அருள் குரூஸ், ரேகன் பாய்வா ஆகிய இருவரும் இலங்கை மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தர்கள்.

இவர்கள் இலங்கையில் இருந்த மீன் பிடிக்க வந்து எல்லை தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்தனரா? அல்லது இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்தனரா?, அல்லது நடுக்கடலில் தமிழக விசைபடகில் இருந்து சமையல் மஞ்சள் மூட்டைகளை வாங்குவதற்காக வந்த போது இந்திய கடற்படையிடம் சிக்கினரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிரமான விசாரனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.