மேலும் 5 பேர் கொரோனாவுக்கு இரை

 


நாட்டில் கடந்த மணித்தியாலத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

பல்லேகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் மாதம் 02 ஆம் திகதி குறித்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகேகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவமனையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவர்தனஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். புற்று நோய் மற்றும் கொவிட் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் தீவிர இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.