கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் முறை

 


கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிபிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள்;

• சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
• சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.
• அடக்கம செய்யப்படும் சடங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
• சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.
• சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.