யேர்மனி டீசில்டோப் மா நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டபேரணி!!.

 இன்று யேர்மனி டீசில்டோர்ப் மா நகரத்தில்  மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்திருந்தனர்.


இதில் பெண்கள் மட்டுமல்லாமல் பல ஆண்களும் பங்கெடுத்தனர்.டீசில்டோர்ப் மா புகையிரதக்ற்கு முன்பாக ஆரம்பித்த இந்த பேரனி தொடக்கத்தில் குர்திஸ் பெண்கள் சார்பாக ஒருவரும் தமிழ்ப்பெண்கள் சார்பாக ஒருவரும் உரையை ஆற்றி ஊர்வலத்தை தொடக்கி வைத்தனர்.


இதில் கலந்து கொண்ட அனைவரும் தமது கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பிய படி நகரவீதியூடாக நடந்து ஒபர்மில்க் மார்க். என்னுமிடத்தை சென்றடைந்தனர். அங்கும் இன்னும் பலர் தமது உரைகளை ஆற்றியிருந்தனர்.


இதிலே யேர்மன் பெண்கள் அமைப்பு சார்பாகவும் பலர் கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரும் பெண்களிற்கு நீதி வேண்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , அரசியல் காரணங்களுக்காக பெண்களை கொலை செய்தல் மற்றும் பெண்அடக்கு முறைக்கு எதிராகவும் தமது குரல்களை எழுப்பியிருந்தனர். இறுதியில் பேரணி ஒன்றுகூடலுடன் நிறைவுற்றது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.