ஹைதராபாத் கோழிப்பிரியாணி - சமையல்!


தேவையான பொருட்கள்:

1. கோழிக்கறி (எலும்புடன்) – 750 கிராம்

2. வெங்காயம் – 2 எண்ணம் (நீளவாக்கில் நறுக்கி நன்கு வதக்கிக் கொள்ளவும்)

3. நல்லெண்ணெய் – 1 /4 கப்

4. நெய் – 2 மேசைக்கரண்டி

5. மல்லித்தழை – 1 /4 கப்

6. புதினா – 1 /4 கப்

7. குங்குமப்பூ – 1 தேக்கரண்டி

8. பால் - 1 /2 கப் (வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்)

சாதத்திற்கு

9. பாஸ்மதி அரிசி – 3 கப் (அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்)

10. பிரியாணி இலை – 1 எண்ணம்

11. கிராம்பு – 2 எண்ணம்

12. அன்னாசிப்பூ – 1 எண்ணம்

13. சோம்பு – 2 தேக்கரண்டி

சிக்கன் ஊற வைப்பதற்கு

14. பச்சை மிளகாய் – 6 எண்ணம் (பொடியாக நறுக்கவும்)

15. இஞ்சிப் பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி

16. மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி

17. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி

18. தயிர் – 1 /2 கப்

19. சோம்பு – 2 தேக்கரண்டி

20. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

21. எலுமிச்சம்பழச்சாறு – 2 மேசைக்கரண்டி

22. உப்பு – தேவையான அளவு

அரைக்க

23. மல்லித்தழை - 1 /4 கப் (பொடியாக நறுக்கவும்)

24. புதினா – 1 /2 கப் (பொடியாக நறுக்கவும்)

25. மிளகு – 8 எண்ணம்

26. பட்டை – 1 துண்டு

27. கிராம்பு – 3 எண்ணம்

28. ஏலக்காய் – 3 எண்ணம்.

செய்முறை:

1. பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2. கோழிக்கறியைக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.

3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை தவிர்த்து, மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடைசியாக புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

4. கோழிக்கறியுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, கோழிக்கறி ஊற வைப்பதற்காகக் கொடுத்துள்ள பொருட்கள் போன்றவைகளைச் சேர்த்து ஊற வைக்கவும்.

5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாகப் பொறித்தெடுத்து, சிறிது வெங்காயத்தை ஊற வைத்திருக்கும் கோழிக்கறியுடன் சேர்க்கவும்.

6. ஊற வைக்கும் கோழிக்கறி குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

7. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் நெய், எண்ணெய் கலந்து கொள்ளவும்.

8. அதனுடன் சாதத்திற்கு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் சோம்பு,பிரியாணி இலை,அன்னாசிப்பூ, பட்டை, கிராம்பு ஆகிய பொருட்களைச் சேர்க்கவும்.

9. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியைச் சேர்த்து அதிக சூட்டில் ஐந்து நிமிடங்கள் வரை அல்லது பாதியளவு வேக வைக்கவும்.

10. வெந்த சாதத்தை வடித்துத் தனியே வைக்கவும்.

11. குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து வைத்திருக்கவும்.

12. அடி கனமான பாத்திரத்தைச் சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள கோழிக்கறியைச் சேர்த்து 2 நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும்.

13. அதன் மேலே வேக வைத்துள்ள சாதத்தை கொட்டிப் பரப்பி விடவும்.

14. அதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா இலை சேர்க்கவும்.

15. இறுதியாகக் குங்குமப்பூக் கலவையை ஊற்றவும்.

16. பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு மூடி வைக்கவும்.

17. அதிக சூட்டில் சில நிமிடங்கள் வரை வைக்கவும். பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து விடவும்.

18. அடி கனமான தட்டையான நான் ஸ்டிக் பாத்திரத்தை அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

19. அடுப்பில் வைத்த பாத்திரம் சூடானதும், இதன் மேலே பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை வைத்து 30 நிமிடங்கள் வரை வேக விட்டு இறக்கவும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.