'ரஜினி' பெயரிலான புதிய படம்


 நடிகர் விஜய் சத்யா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'ரஜினி' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

இயக்குனரும், நடிகருமான ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ரஜினி'. 'மகாராஜா' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் சத்யா, இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை கைநாட் அரோரா நடிக்கிறார். மனோ வி நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அம்ரிஷ் இசை அமைக்கிறார்.

'ஓரம்போ', 'வாத்தியார்', '6.2 ' ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி. பழனிவேல் சிறிய இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' நாயகனின் பெயர் ரஜினி பிரியன். அவனது நண்பர்கள் செல்லமாக நாயகனை 'ரஜினி' என்றே அழைப்பார்கள்.

அதனால் படத்திற்கு 'ரஜினி' என்று பெயரிடப்பட்டிருக்கிறோம். எதிர்பாராத தருணத்தில் நாயகன் இரவு நேரத்தில் ஒரு விபத்தில் சிக்க, அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆக்சன் திரில்லர் ஜானரில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கியிருக்கிறோம். இந்தப்படத்தில் நாயகனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது.' என்றார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பான நிலையில் இருக்கும் பொழுது, 'ரஜினி' என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராவது, திரைத்துறை ரசிகர்களை மட்டுமல்ல அரசியல் கட்சியின் தொண்டர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.